கள்ள சாராயம் விற்பனையை தடுக்க தவறியதாக திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 59 பேர் பலியானார். மேலும் ஏராளமான சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து இன்று தமிழக முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று.
கள்ள சாராயம் விற்பனையை தடுக்க தவறியதாக தமிழக அரசை கண்டித்து புதிய தமிழகம் வழக்கறிஞர் அணி சார்பில் மாநில வழக்கறிஞர் பரிவு செயலாளர் ரமேஷ் தலைமையில் மாநகரச் செயலாளர் எஸ் ஆர் ரமேஷ் மாநகர வழக்கறிஞர் தலைவர் ஜெகன் துணைத் தலைவர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.திமுக அரசை கண்டித்தும் முதல்வர் ஸ்டாலின் உடனே பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்