தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட சமத்துவ மக்கள் கழகம் செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.
தூத்துக்குடி சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில், நாடார் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் பிறந்தநாளை முன்னிட்டு பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சார்ந்த பள்ளி மாணவிக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.
நிறைவேற்றப்பட தீர்மானங்கள்;
சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவரும், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன்Ex,MLA - வின் சீரிய முயற்சியில் தமிழ்நாடு முழுவதும் 14 கடற்கரை மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதை நடும் மகத்தான பணியினை வெற்றிகரமாக செய்து முடித்து உலக சாதனை பட்டியலில் இடம் பெற்ற தலைவரையும் இத்திட்டம் வெற்றி பெற பாடுபட்ட அனைத்து சமூக அமைப்புகளையும் அதிகாரிகளையும் மாணவச் செல்வங்களையும் பாராட்டியும்.
தமிழ்நாடு அரசின் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரை சூட்டியதைப் போல் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட தமிழக அரசை வலியுறுத்தியும்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என சமத்துவ மக்கள் கழக தோழர்களை கூட்டம் கேட்டுக் கொள்கிறது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் லயன் பழனிவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பண்ணையார்,மாவட்டத் துணைச் செயலாளர் அந்தோணி சேவியர், மாவட்ட பிரதிநிதிகள் பெரியசாமி, பவித்ரா முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் கரும்பு கணேசன், மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சிவசு முத்துக்குமார்,மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகராஜ், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ராஜகோபால்,மாநகரச் செயலாளர் உதயசூரியன்,மாவட்ட மீனவர் அணி துணை செயலாளர் அந்தோணி ஜோசப்,மாநகர தொண்டரணி செயலாளர் காமராஜ்,ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் சுந்தர், வார்டு செயலாளர் சண்முக குமார், உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.