தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனைக் கூட்டம் மண்டலத் தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி மண்டல கூட்டம் பிப் . 25 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் , இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மண்டலத் தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்றது.
மண்டல கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகனை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் டி.சோலையப்ப ராஜா,மாவட்டச் செயலாளர் ஆர்.மகேஸ்வரன், மாவட்ட பொருளாளர் ஏ.ஆர். ஆனந்த பொன்ராஜ், மாநில அமைப்பு செயலாளர் பி.ராஜம், மாநில துணைத் தலைவர் வெற்றி ராஜன்,மாவட்ட கூடுதல் செயலாளர் செந்தில் குமார், சேதுபாதை தலைவர் திருமால் டி.ஆர்.மகேஸ்வரன் பீட்டர் , தென்காசி மாவட்ட செய்தித் தொடர்பாளர் ஏ.இம்மானுவேல் ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த மண்டல தலைவர் வைகுண்ட ராஜாவுக்கு மகேஸ்வர சிங் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.