மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எம் சி.சண்முகையா எம்எல்ஏ தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எம் சி.சண்முகையா எம்எல்ஏ தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை எனவும் ஊராட்சியில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் எனவும் பகுதி மக்கள் சண்முகையா எம்எல்ஏ- விடம் கோரிக்கை விடுத்ததையடுத்து இன்று மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகைய தலைமையில் அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

 பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தும் விரைந்து செய்து தர நடவடிக்கை எடுக்கவும் , அடிப்படை தேவைகளான குடிநீர் மின்சாரம் தடையில்லாமல் வழங்க வேண்டும் என சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் எம்எல்ஏ சண்முகையா கேட்டுக்கொண்டார்.

இந்த கலந்தாய்வு  கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹைகோர்ட்ராஜா பானு,குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராமசாமி, உதவி செயற்பொறியாளர் குமார், மின்வாரிய செயற்பொறியாளர் சின்னத்துரை, உதவி செயற்பொறியாளர் பிரேம், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் மகேஷ், முருகேஷ்வரி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் முத்தையா, உதவி பொறியாளர் ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், ஒன்றிய துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன்,மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் பொன்பாண்டி என்ற ரவி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ் பாலன், தொம்மைசேவியர், பிலோமின்ராஜ்,ஊராட்சி செயலர் ஜெயக்குமார், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் சக்திவேல், பாரதி, சேசுராஜா,தங்கமாரிமுத்து, கிளை செயலாளர்கள் காமராஜ், கதிர்வேல், பொன்னுச்சாமி, பிரபாகர், மைக்கேல்ராஜ், மற்றும் தூய்மை காவல் மேற்பார்வையாளர்கள் குடிநீர் வடிகால் வாரிய ஆப்ரேட்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.