வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் - எம் சி.சண்முகையா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் - எம் சி.சண்முகையா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சிதுறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மின்சார வாரிய அவலர்களுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் அத்தியாவசிய தேவையான குடிநீர் விநியோகம், தெருவிளக்கு , சுகாதார பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் தேவைப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் சண்முகையா எம்எல்ஏ கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார். 

இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிச்சாமி,ஜவஹர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜாண்செல்வம், மின்வாரிய உதவி பொறியாளர் சங்கீதா, இளநிலை பொறியாளர் பியோ,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு,பட்டத்தி,சுதாகர், ஒன்றிய பொறியாளர்கள் தளவாய், மாரியப்பன், மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் அனைத்து ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.