தேவராஜ் வஸ்தாவி சிலம்பாட்ட கழகம் மற்றும் நேரு யுவகேந்திரா இனைந்து நடத்திய மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.
தேவராஜ் வஸ்தாவி சிலம்பாட்ட கழகத்தின் மாநில சிலம்பாட்ட போட்டி தூத்துக்குடி T.சவோியாா்புரம் ஆா் சி உயா்நிலைப்பள்ளியில் நடைபெற்றது
போட்டிகள்; ஒற்றைக்கம்பு. இரட்டைக்கம்பு. வேல்கம்பு. சுருள்வாள்.ஆகிய போட்டிகள் எல் கே ஜி முதல் 3ஆம் வகுப்பு வரையும் 4 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரையும் 8 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வரையும் 18 வயதினருக்கான பிாிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றது.
காலையில் போட்டியை T.சவோியாா்புரம் ஊா் நிா்வாகிகள் சேவியா்,நிக்கோலஸ், தொழில் அதிபா் பொன்குமரன் ஆகியோர் துவக்கி வைத்தனா்.
மாலையில் வெற்றி பெற்ற சிலம்பாட்ட கழகத்தினருக்கு பாிசு வழங்கும் நிகழ்வானது நடைபெற்றது சவோியாா்புரம் பங்கு தந்தை அருட்திரு குழந்தை ராஜன் தலைமையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவா் சரவணக்குமார் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சவோியாா்புரம் ஊா் நிா்வாகி பிரான்ஸிஸ்,தூத்துக்குடி ஒன்றிய கவுன்சிலர் அந்தோனி தனுஸ்பாலன்,பஞ்சாயத்து உறுப்பினா் பாரதிராஜா,முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினா் ஆனந்தகுமாா் தேவராஜ் வஸ்தாவி சிலம்பாட்டக் கழகத் தலைவா் அருள்அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
12 பாிசுகள் பெற்று முதல் இடத்தைப் கணேசன் சிலம்பாட்டக் கழகத்தினா் முதல் பாிசை பெற்றனா்,10 பாிசுகள் பெற்று ஸ்ரீ தா்மா முனீஸ்வரா் சிலம்பம் பள்ளி முதுகுளத்துாா் சிலம்பம் ஆசான் ஜீவா இரண்டாவது பாிசு பெற்றாா் மூன்றாவதாக 8 பாிசுகள் பெற்று புதுக்கோட்டை சிலம்பாட்டக்கழக செந்தூா் பாண்டி மூன்றாவது பாிசு பெற்றாா்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை தேவராஜ் வஸ்தாவி சிலம்பாட்டக் கழக தலைவா் அருள் அந்தோணி செய்திருந்தாா்