தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு ஹவுசிங் போர்டு பகுதியில் சபா கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி முன்னிலையில் நடைபெற்றது.
பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் துரிதமாக செய்து கொடுக்கப்படும் - மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி.
தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு ஹவுசிங் போர்டு பகுதியில் சபா கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் 3 வது மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி முன்னிலையிலும் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் துரிதமாக செய்து கொடுக்கப்படும் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியிலுள்ள வார்டுகளுக்கு தலா 5 குழுக்கள் வீதம் 60 வார்டுகளுக்கு 300 பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பகுதி சபா கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு அந்தந்த பகுதிகளில் நடத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில், 3 வது மாமன்ற உறுப்பினர்மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மக்கள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில் சாலைகளை சீரமைப்பது, முக்கிய சாலைகளில் குறிப்பிட்ட இடங்களில் வேகத்தடைகள் அமைப்பது, கழிவுநீர் கால்வாய்களை சீரமைப்பது, சுத்தமான குடிநீர் வழங்குவது என அனைத்துப் பணிகளும் துரிதமாக செய்து கொடுக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களுக்கு உறுதி அளித்தார்.
இந்த பகுதி சபா கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், திமுக பிரதிநிதியும் மேயரின் உதவியாளருமான பிரபாகர்மேற்கொண்டார்.திமுகழக முன்னோடி மதியழகன் பார்த்திபன்,இளைஞர் அணி வேல்முருகன்,ராஜாமணி, மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.