54 வயது தொழிலாலளியை மணந்த 26 வயது ஆசிரியை ருசிகரம்.

54 வயது தொழிலாலளியை மணந்த 26 வயது ஆசிரியை ருசிகரம்.

சேலம் அருகே 54 வயது தொழிலாளியை மணந்த 26 வயது ஆசிரியை பரபரப்பு.

சேலம் அருகே 54 வயது தொழிலாளியை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்த 26 வயது பட்டதாரி இளம்பெண் பாதுகாப்பு கேட்டு போலீஸ் இணையத்தில் தஞ்சம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே மாட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் 54 விசைத்தறி தொழிலாளி இவருக்கு 24 வயதில் ஒரு மகன் உள்ளார் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கிருஷ்ணன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார் இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கிருஷ்ணனுக்கு பழக்கம் இருந்தது வந்துள்ளது இதை அடுத்து அந்த பெண் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார் அப்போது அந்த பெண்ணின் மகளான முதுகலை பட்டம் மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த விமலா 26 மீது கிருஷ்ணன் காதல் பார்வை விழந்தது விமலாவுக்கும் கிருஷ்ணனை பிடித்துப் போகவே தாய்க்கு தெரியாமல் மகளிடம் கிருஷ்ணன் காதல் லீலையை அரங்கேற்றி வந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி விமலா திருவண்ணாமலை கோயிலில் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார் இதை அறிந்த தந்தை அய்யம்பெருமாள் அதிர்ச்சியுடன் தனது மகளை கிருஷ்ணன் கடத்திச் சென்று விட்டதாக தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார் அதன் பெயரில் இருவரையும் தாராளமங்கலம் போலீஸ் தேடி வந்தனர் இதை அறிந்த காதலர்கள் பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் தஞ்சமடைந்தனர் தகவல் அறிந்து போலீஸ் நிலையத்திற்கு வந்த பெண்ணின் உறவினர்கள் உனக்கு தந்தை போன்று இருப்பவரை பட்டம் படித்த நீ திருமணம் செய்து கொள்ளலாமா? என்று அறிவுரை கூறினார்.

இந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ள மறுத்த விமலா தான் காதல் கணவருடன் தான் சொல்வேன் என்று உறுதியாக இருந்ததன் அடிப்படையில் அவர்கள் இருவரும் மேஜர் என்பதனால் காவல் துறையினர் காதல் கணவர் கிருஷ்ணனுடன் விமலாவை அனுப்பி வைத்தனர். இதனால் விமலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த காதல் திருமணம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது