8 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி;. எம்எல்ஏ மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தில் 8-லட்சம் மதிப்பில் 60,000-லி கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன்,எட்டயபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதி கணேசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் முத்துகுமார்,எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன், கோவில்பட்டி முன்னாள் நகர் மன்ற தலைவர் சங்கரபாண்டியன், நடுவிற்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் ஆழ்வார் உதயகுமார், தொழிலதிபர் முனியசாமி,வார்டு செயலாளர்கள் பிச்சை,அருள் சுந்தர்,மயில்ராஜ் மகளிர் அணி முருகலட்சுமி,முத்துமாரி உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.