தூத்துக்குடி உன்னத் பாரத் அபியான் சமூக மேம்பாட்டு திட்டம் மற்றும் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் 74 வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.
வீரநாயக்கன் தட்டு கிராமத்தில் குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் உன்னத் பாரத் அபியான் சமூக மேம்பாட்டு திட்டம் மற்றும் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகள் பெண்கள் மேம்பாடு என்னும் தலைப்பில் பல பயிற்சிகள் நடத்தினர்.
74 வது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி உன்னத் பாரத் அபியான் சமூக மேம்பாட்டு திட்டம் மற்றும் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி நுண்ணுயிரியல் துறை ஆகியவை இணைந்து ஜனவரி 26 2023 அன்று வீர நாயக்கன் தட்டு கிராமத்தில் ஏற்பாடு செய்தனர்.
நிகழ்ச்சியில் வீரநாயக்கன் தட்டு கிராம பஞ்சாயத்து தலைவர் சந்தனகுமார் கலந்து கொண்டு கிராம மக்களை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஊக்குவித்தார் நுண்ணுயிரியல் துறையின் மாணவிகள் கிராம மக்களின் திறமையை வளர்ப்பதற்கும் அவர்களின் வருமானத்திற்கும் உதவியாக பயிற்சி அளித்தனர் நிகழ்நிலை வணிகம் பற்றிய அறிவு பெண்களின் தொழில் முனைவு பற்றிய விவரங்கள் ஆரம்ப நிலை தையல் பயிற்சி நிகழ்நிலை மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் முறை பெண்களுக்கு எளிதில் ஏற்படும் நோய்கள் குறித்த விழிப்புணர்வும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளும் போன்ற தகவல்களும் பயிற்சிகளும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மாணவிகள் உற்சாகமாக கற்றுக் கொடுத்தனர் திருமதி சைனிஷா பேகம் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் தூய மரியன்னை கல்லூரி தலைமையில் இரண்டாம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை மாணவிகள் நிகழ்ச்சியை நடத்தினர் இந்தக் கிராமத்தில் நடத்த உறுதுணையாக இருந்த வீர நாயக்கன் பஞ்சாயத்து தலைவர் சந்தனகுமாருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.