74-வது குடியரசு தின விழா; எம்எல்ஏ மார்கண்டேயன் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

74-வது குடியரசு தின விழா; எம்எல்ஏ மார்கண்டேயன் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாழ்த்துக்கள் வனத்துக்குள் விளாத்திகுளம் அமைப்பின் சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் சாந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்ச்சாமி,முன்னாள் தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசம்,விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ்,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணை தலைவர் வேலுச்சாமி,தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன்,மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சென்றாயப் பெருமாள்,வார்டு செயலாளர்கள் சங்கரலிங்கம், ஸ்டாலின் கென்னடி,மாரிராஜ்,வார்டு கவுன்சிலர்கள் சுப்புராஜ், கலைச்செல்வி செண்பகராஜ்,சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.