முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் விழா - ஒன்றிய செயலாளர் இளையராஜா 500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்.

முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் விழா - ஒன்றிய செயலாளர் இளையராஜா 500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா ஏற்பாட்டில் 500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி ஓட்டப்பிடாரத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு. க.ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மீன்வளம் மீனவர் நலன் மட்டும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அரிசி பை, வேட்டி சேலை ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.