7-லட்சம் மதிப்பில் புதிய சமுதாய நலக்கூடம்: எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியம்,பிள்ளையார்நத்தம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 7-லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார்,தங்கவேல் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன்,பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் முனீஸ்வரி,துணைச் செயலாளர்கள் சுப்புராஜ், சின்ராஜா உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.