தூத்துக்குடியில் 4 வது புத்தக கண்காட்சி-இலவச பேருந்து வசதி- எம்பி கனிமொழி கருணாநிதி தகவல்!.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 4 வது புத்தககண்காட்சி 21/04/23 இன்று தொடங்கி மே 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது தூத்துக்குடி டூ எட்டையாபுரம் சங்கர பேரி பிரதான சாலை அருகே நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியை தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற திமுக குழு துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி கலந்துகொண்டு புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.இதை தொடர்ந்து ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளை பார்வையிட்டார் தொடர்ந்து தொல்லியல் பொருட்கள் குறித்த கண்காட்சியை துவங்கி வைத்த கனிமொழி எம்பி அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிவகளை கொற்கை ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களையும் பார்வையிட்ட கனிமொழி எம்பி தத்துரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்லியல் இடங்களையும் பார்வையிட்டார்.
மேலும் கனிமொழி எம்பி செய்தியாளரிடம் பேசிய போது பத்து நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் 110 அரங்குகளில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மேலும் சிவகளை கொற்கை உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி குறித்தும் தொல்லியல் பொருட்களின் கண்காட்சி நடைபெறுகிறது இதுபோல் புகைப்பட கண்காட்சியும் நடைபெற உள்ளது கடைசி நான்கு நாட்கள் பாரம்பரிய கலைகளை பறைசாற்றும் வகையில் நெய்தல் கலை விழாவும் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
மேலும் இந்த புத்தக கண்காட்சியை பொதுமக்கள் வந்து பார்த்து செல்ல வசதியாக பழைய பேருந்து நிலையத்திலிருந்து இலவசமாக அரசு பேருந்து இயக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், வட்டாட்சியர் செல்வகுமார், 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி, இளைஞர் அணி வேல்முருகன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, கெளதம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் அரசுதுறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.