தூய்மை பணியாளர்களுக்கு 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி பொங்கல் பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் மற்றும் லாரிகள் மூலம் கழிவு நீர் அகற்றும் ஊழியர்களுக்கும் 3 வது வார்டுக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு பூங்காவில் வைத்து மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி தலைமையில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் லாரிகள் மூலம் கழிவு நீர் அகற்றும் ஊழியர்களின் பணியை போற்றும் விதமாக அவர்களுக்கு பொங்கல் பரிசும் சன்மானமும் மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் டிடிசி ராஜேந்திரன் வேல்முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.