திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகர் கண்டெடுத்த 368 ஆண்டு திருவிழா!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகர் கண்டெடுத்த 368 ஆண்டு திருவிழா!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி சண்முகரை கடந்த 368 வருடங்களுக்கு முன்பு டச்சுக்காரர்களால் கொள்ளையடித்து படகில் கொண்டு செல்லும்போது கடும்புயல் மற்றும் சூராவளி காற்று வீசியதாலும் டச்சுக் கொள்ளையர்கள் செய்வது அறியாது சண்முகர் விக்ரகத்தை மீண்டும் கடலில் போட்ட பின்னர் காற்றும் மழையும் நின்றது. 

பின்னர் சுவாமி சண்முகர் முருகபக்தரான வடமலையப்ப பிள்ளை கணவில் தோன்றி தான் கிடக்கும் இடத்தை சொல்லி அந்த இடத்தில் ஒரு எலுமிச்சம்பழம் மிதக்கும் வானத்தில் கருடன் வட்டமிடும் என தெரிவித்தார்.

உடனடியாக வடமலையப்ப பிள்ளை பணியாளர்களுடன் படகில் சென்று எலுமிச்சம்பழம் மிதக்கும் இடத்தில் கடலில் குதித்து சண்முகர் விக்ரகத்தை மீட்டு வந்து ஆகம் விதிப்படி கோவிலுக்கு கொண்டுவந்து சேர்த்தார்.

சண்முகர் விக்ரகம் ஐம்பொன்னால் செய்யப்பட்டதாக இருந்தாலும் கடலில் கிடக்கும்போது மீன்கள் அவரது முகத்தை கடித்ததால் சுவாமி சண்முகரது முகம் மொழு மொழு என்று இல்லாமல் இப்போதும் காணப்படுகின்றது. வருடாவருடம் சுவாமி சண்முகர் கண்டு எடுக்கப்பட்ட தினத்தை வருட வருடம் கொண்டாடப்படுகிறது.இன்று திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறுகின்றது. 

6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகின்றது. பின்னர் தொடர்ந்து மற்ற கால பூஜை நடைபெறுகின்றது. மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாய் உகந்த பெருமாள் சப்பரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று கோவில் வந்துசேரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்திக், அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன்,மேனேஜர் சிவநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.