அத்துமீரும் காற்றாலை நிறுவனங்கள் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு.

அத்துமீரும் காற்றாலை நிறுவனங்கள் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் காற்றாலை நிறுவனங்கள் ஆக்கிரமிப்மை தடுக்க கோரியும்,புறம்போக்கு இடங்களில் அரசு அனுமதி இல்லாமல் நடபடுகின்ற போஸ்ட்களை அகற்ற கோரியும் வருகின்ற 26.01.2023 அன்று குடியரசு தினத்தன்று நடைபெறயிருக்கும் கிராம சபை கூட்டத்தை 25 ஊராட்சி மன்ற தலைவர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் குலசேகரநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராகவும் ,ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அனைத்து 61 கிராம பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவருமான வேலாயுதசாமி விடுத்துள்ள அறிக்கையில்.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல கிராம பஞ்சாயத்துகளில் ஒரு சில காற்றாலை நிறுவனங்கள் எவ்வித அரசு அனுமதி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒப்புதல் இல்லாமல் காற்றாலைகளை அமைத்து வருகிறது.மேலும் அரசு மற்றும் புறம்போக்கு ஓடைகள் மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுப்பாதைகளை ஆக்கிரமிப்பு செய்து வெளிமாநில தொழிலாளர்களை வைத்தும் முகவரியல்லாத அடி ஆட்களின் துணையோடு  ஊராட்சிப குதிகளில் அமைத்து வருகின்றனர்.

இதனால் ஊராட்சிப் பகுதியில் உள்ள பாதைகள் அனைத்தும் சேதமடைந்து பொதுமக்கள் பாதைகளை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காற்றாலை நிறுவனங்களாளினாலும் , அரசு புறம்போக்கு இட ஆக்கிரமிப்பினாலும் பெரிய அளவில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் . மேலும் ஏற்கனவே கிராம ஊராட்சி தனி அலுவலர் காலத்தில் அமைக்கப் பெற்ற காற்றாலைக்கும் முறையாக எவ்வித தொழில் வரியும் ,காற்றாலை நிறுவங்கள் கட்டுவதில்லை எனவும். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உரிய மரியாதையும் காற்றாலை நிறுவனங்கள் தருவதில்லை எனவும். ஊராட்சி பகுதியில் உரிய அனுமதியில்லாமல் நடைபெறும் காற்றாலை பணிகள் மற்றும் ஊராட்சி மன்ற அனுமதியில்லாமல் நடைபெறும் காற்றாலை Substation பணிகளை உடனடியாக நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டியும் அரசு மற்றும் புறம்போக்கு ஓடைகள் ( LD ) ஊராட்சி பாதைகளில் அனுமதியில்லாமல் வெளிமாநில முகவரியில்லாத முறைப்படுத்தப்படாத பணியாளர்களை வைத்து நட்டப்பட்டு வருகின்ற காற்றாலை உடனடியாக போஸ்ட்களை ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எங்களை கேட்டுக் கொண்டதின் பேரிலும் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 25 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தன்று நடக்கவிருக்கும் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ள 25 ஊராட்சி மன்ற பெயர்கள் பார்வைக்கு;

1.குலசேகரநல்லூர் 2.சில்லாநத்தம்,3.ஓட்டப்பிடாரம் 4.இராஜாவின்கோவில், 5.சாமிநத்தம், 6.பாஞ்சாலங்குறிச்சி, 7.வேடநத்தம்,8.தருவைக்குளம், 9.குதிரைக்குளம்,10. மருதன்வாழ்வு 11.S. கைலாசபுரம், 12.பசுவந்தனை, 13.ஐம்புலிங்காபுரம் 14.கொல்லம்பரும்பு, 15.கொல்லங்கிணறு,16.கலப்பைப்பட்டி, 20.சில்லாங்குளம், 17.கச்சேரிதளவாய்புரம்,18.P.துரைச்சாமிபுரம் , 19.ஒட்டநத்தம், 21.நாகம்பட்டி, 22.மேலபாண்டியாபுரம், 23.அகிலாண்டபுரம், 24.பாறைக்குட்டம், 25.வாலசமுத்திரம்