ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 15 பேர் படுகொலை - அணில் அகர்வால் தமிழகத்துக்கு வருகை தருவதை தடை செய்ய வேண்டும் முதல்வருக்கு அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கோரிக்கை.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 15 பேர் படுகொலை - அணில் அகர்வால் தமிழகத்துக்கு வருகை தருவதை தடை செய்ய வேண்டும் முதல்வருக்கு அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கோரிக்கை.

2018 மே 22 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மண்ணை விட்டு நிரந்தரமாக அகற்றுவது தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுக்கும் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் கொடூரமாக கொல்லப்பட்டார்.

 போராட்டத்தில் 15 பேர் கொல்லப்பட்டதற்கு ஸ்டெர்லைட் நிறுவனர் அனில் அகர்வால் காரணம் ஏனெனில் ஆலை மூலம் விஷ வாயுக்களை வெளியிட்டு கண்ணுக்கு தெரியாமல் ஆயிரக்காணோர் புற்றுநோய் போன்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். 

அதனை வலியுறுத்தியே போராட்டம் நடைபெற்றது எனவே 15 நபர்களின் சாவுக்கு முக்கிய காரணமே அனில் அகர்வால் தான். இது தொடர்பாக தொடர்பாக நீதி அரசர் அருணா ஜெகதீசன் தலைமையான நீதி விசாரனை ஆணையம் குற்றவாளிகளை அடையாளம் காட்டி அறிக்கையினை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தது.

தமிழக முதல்வரும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தும் தற்போது வரை முழுமையாக நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரியது . 

இன்று மண்ணையும் , சுற்றுசூழலையும் காக்க உயிர் நீத்த தியாகிகளின் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தும் தியாகிகளுக்கு நீதி கிடைக்கவில்லை .

இந்த நிலையில் சென்னையில் ஒரு பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார் என்ற செய்தி மிகவும் ஜீரணிக்க முடியாத செயலாகும். 

இதன் மூலம் அந்த பள்ளி மாணவ மாணவிகளிடம் விசமத்தை பரப்பும் விதமாக அவரது உரையின் செயல்பாடு இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை . அதோடு எம் மண்ணிற்க்கும் மக்களுக்கும் தீங்கிலைத்து விட்டு 15 பேர் சுட்டு படுகொலை செய்ய காரணமாக இருந்து விட்டு எம் மண்ணில் காலடி வைப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது . எனவே தமிழக முதல்வர் இந்த விசயத்தில் நேரடியாக தலையிட்டு அனில் அகர்வால் விழாவிற்க்கு வருவதை தடைசெய்ய ஆவணம் செய்யவேண்டும். 

மேலும் தியாகிகளின் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு உடனடியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் . மண்னையும் , சுற்றுசூழலையும் , மக்களையும் பாதுகாக்க உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூறும் விதமாக பொதுமக்கள் ஓரிடத்தில் கூடி அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கி மணிமண்டபம் அணைத்திட வேண்டும் . மே -22 தினத்தில் மட்டும் தியாகிகளுக்கு அரசு மரியாதை செலுத்தும் விதமாக தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விட வேண்டும் . மே -22 அன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தூத்துக்குடி மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் . சுற்று சூழலியல் காத்த தியாகிகள் என அறிவித்து அரசு மே 22 நினைவு நினத்தில் மரியாதை செலுத்த வேண்டும் . ஸ்டெர்லைட் ஆலையை மண்ணைவிட்டு நிரந்தரமாக அகற்ற ஆக்கபூர்வ சட்ட நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும் . போன்ற கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்திட வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக அருணா தேவி ரமேஷ் பாண்டியன் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.