மகாகவி பாரதியாரின் 143 வது பிறந்த விழா - எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாகவி பாரதியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் எட்டயபுரத்தில் கொண்டாடப்பட்டது.
முன்னாள் அமைச்சர், தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, ஆலோசனையின் பேரில் எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் பாரதியாரின் 143 வது பிறந்த நாளை முன்னிட்டு எட்டயபுரம் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள், கார்டன் பிரபு, சின்னத்துரை, கருப்பசாமி,சிவா ஜெயக்குமார், சீனா என்ற முத்துகிருஷ்ணன், சொக்கன், சிவசங்கர பாண்டியன், மூர்த்தி, செல்வி, சாந்தி, ரத்தினம் , மாவட்ட கழக நிர்வாகிகள் வேலுச்சாமி, மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.