முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா- திருவுருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா- திருவுருவ சிலைக்கு  அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் இன்று (15.09.2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

முதல்வரும், எழுத்தாளரும், பேச்சாளருமான பேரறிஞர் சி.என். அண்ணாதுரையின் 116 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தமிழ்ச்சாலை ரோடு காய்கறி மார்க்கெட் எதிரே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ் ராமகிருஷ்ணன் பொன்னப்பன் சரவணகுமார் ராஜதுரை இசக்கிராஜா மருத்துவர் அணி மாவட்ட தலைவர் அருண் குமார், மாநில கழக பேச்சாளர் சரத் பாலா, முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், சுற்றுச்சூழல் அணி மகேஸ்வரன் சிங் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.