11 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம்: எம்எல்ஏ மார்க்கண்டேயன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 11-லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல் ,மகேந்திரன்,விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி,விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு,புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் தமிழரசி, ஜெயராணி,பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி,மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணகுமார், ராமலிங்கம்,வார்டு செயலாளர்கள் கண்ணன், ஸ்டாலின் கென்னடி,சிவசுப்பிரமணியன்,முத்துமாரியப்பன், சங்கரலிங்கம்,தமிழரசன், வெங்கடேஷ்,மாரிராஜ் வார்டு கவுன்சிலர்கள் குறிஞ்சி, சுப்புராஜ், கலைச்செல்வி செண்பாகராஜ், முன்னாள் வார்டு கவுன்சிலர் ராமமூர்த்தி,கமலாபுரம் மாரிச்சாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.