மதுரையில் 101 ஆடுகள் வெட்டி சாய்ப்பு. எதற்காக....

மதுரையில் 101 ஆடுகள் வெட்டி சாய்ப்பு. எதற்காக....

மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நூறு ஆடுகள் வெட்டப்பட்டு 100 மூட்டை அரிசியில் சமையல் செய்து ஆண்கள் மட்டுமே சாப்பிட்டு மகிழும் விநோத திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அனுப்பபட்டி கிராமத்தில், காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோவிலில் இந்த திருவிழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

வருடம் தோறும் மார்கழி மாதம் இந்த திருவிழா நடைபெறும்.இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க இயலாது.

இந்த விழாவில், பலியிடப்படும் ஆடுகள் அனைத்தும் கோயிலில் வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது, யாரும் மக்கள் யாரும் இந்த ஆடுகளுக்கு எந்த இடையூறும் செய்வதில்லை.

நேற்று காலை பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கி. அதனைத் தொடர்ந்து நேர்த்திக் கடனாக விடப்பட்ட 101 ஆடுகள் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்பட்டது.

100 மூட்டை அரிசியில் சாதம் தயாராக இந்த கறி விருந்து திருவிழாவில் கலந்து கொண்ட சுமார் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது.

வாழை இலை போட்டு சாதமும், ஆட்டுகறி குழம்பும் ஆண்களுக்கு பிரசாதமாக பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது திருவிழாவின் வழக்கமாம். இந்த இலைகள் காய்ந்து, அந்தப் பகுதியில் இருந்து அகன்ற பிறகே பெண்கள் கோயிலின் தரிசனத்திற்கு வருவார்களாம்.