தூத்துக்குடியில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 100 வது பிறந்த நாள்- தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டினார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடு நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள ரஹ்மத் நகர் பகுதியில் நடைபெற்றது இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டி துவங்கி வைத்தார்.
தொடர்ந்து அந்தப் பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது இதுபோல் தூத்துக்குடியில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் மரக்கன்றுகள் நடும்பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக போல் பேட்டை மற்றும் சங்கரபேரி குடியிருப்பு பகுதி ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புகைப்படத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மண்டல தலைவர்கள் நிர்மல் ராஜ்,கலைச்செல்வி, மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி,சுப்புலட்சுமி, விஜயலட்சுமி,வைதேகி, நேர் நேர்முக உதவியாளர் ரமேஷ் உதவியாளர் பிரபாகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.