தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியினர் 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி எர்ணாவூர் நாராயண் தலைமையில் சமத்துவ மக்கள் கழகத்தில் இணைந்தார்.

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியினர் 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி எர்ணாவூர் நாராயண் தலைமையில் சமத்துவ மக்கள் கழகத்தில் இணைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சமத்துவ மக்கள் கட்சியின் பொருளார் சூசைமுத்து தலைமையில் அக்கட்சியினை சேர்ந்த நிர்வாகிகள் 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தூத்துக்குடி வருகை தந்த சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்.கட்சியில் இணைந்த அனைவருக்கும் கட்சி சால்வை அணிவித்து வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து 29/04/24 அன்று நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பாடுபட வேண்டும். வீடு தோறும் சென்று வாக்குகள் சேகரிக்க எனவும் மேலும் கிராமங்கள் தோறும் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் நிர்வாகிகளிடம் எர்ணாவூர் நாராயண் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வக்கீல் கண்ணன் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் பொருளாளர் லயன் பழனிவேல் பிரதிநிதி பெரியசாமி இளைஞரணி செயலாளர் பசும்பொன் முருகன் வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் ஶ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.