தாமிரபரணி ஆற்றுக் கரையோரம் விதைப்பதற்காக சேகரித்து சேமித்து வைத்திருந்த 1.5 லட்சம் பனை விதைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது .

தாமிரபரணி ஆற்றுக் கரையோரம் விதைப்பதற்காக சேகரித்து சேமித்து வைத்திருந்த  1.5 லட்சம் பனை விதைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது .

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனைமர விதைகளை விதைக்க வேண்டும் என்பதற்காக சமூக அக்கறையோடு, சேவை மனப்பான்மையோடு கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து பனைமர விதைகளை சேகரித்து நீர் நிலைகளை பாதுகாக்க, மண்ணரிப்பை தடுக்க, தாமிரபரணி ஆற்றாங்கரையோரங்களிலும், குளத்தங்கரை, வாய்க்காங்கரை பகுதிகளிலும், புயல் சூறாவளி பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்க கடற்கரை பகுதிகளிலும், நிலத்தடி நீரை மேம்படுத்த அரசு புறம்போக்கு இடங்களிலும் மற்றும் சாலை ஓரங்களிலும் தொடர்ந்து பனைமர விதைகளை விதைத்து வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்த தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில், கடம்பாகுளம் கரையோரங்களில், கடம்பாகுளம் மறுகால் ஓடை கரையோரங்களில், மற்றும் சேதமடைந்த குளத்தாங்கரை, வாய்க்கங்கரை பகுதியில் இந்தாண்டு 5 லட்சம் பனைமர விதைகளை விதைக்க திட்டமிட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி தொடர்ந்து பனை மர விதைகளை விதைத்து வருகிறார்கள். தற்போது வரை சுமார் 3.5 லட்சம் பனைமர விதைகளை விதைத்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டு வெள்ளத்தில் சேதமடைந்த தாமிரபரணி ஆற்றங்கரையோரம் விதைப்பதற்காக மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் சேதுக்கு வாய்தான், சொக்கப்பழக்கரை, குச்சிக்காடு, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் 1.5 லட்சம் பனை மர விதைகளை சேகரித்து ஆற்று கரையோரம் சேமித்து வைத்திருந்தனர். நேற்று 14/12/2024 எதிர்பாராத விதமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆட்டங்கரையோரம் சேகரித்து, சேமித்து தரமான விதைகளை தரம் பிரித்து விதைப்பதற்கு தயாராக வைத்திருந்த 1.5 லட்சம் பனைமர விதைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதை அறிந்து மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி, தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில பொதுச் செயலாளர் சொ.சு. தமிழினியன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆறுமுகச்செல்வன், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி ஆகியோர் வெள்ளத்தில் அடித்து சென்ற இடத்தை பார்வையிட்டனர்