ஒட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் சிறப்பு நன்றி தெரிவிக்கும் கூட்டம் - முதலமைச்சர் துணை முதலமைச்சருக்கு யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் நன்றி தெரிவித்தார்.

ஒட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் சிறப்பு நன்றி தெரிவிக்கும் கூட்டம் - முதலமைச்சர் துணை முதலமைச்சருக்கு யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் நன்றி தெரிவித்தார்.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 61 ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 5 ஆண்டு காலம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களின் சிறப்பான பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

யூனியன் சேர்மன் எல் ரமேஷ் பேசுகையில்;

பொதுமக்களுக்கு பணிசெய்திட வாய்ப்பு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா ஆகியோருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து கொண்டார்.மேலும் கடந்த 5 ஆண்டு காலம் அரசியல் மற்றும் இதர வேறுபாடுகளை கடந்து தன்னுடன் இணைந்து திறம்பட பணியாற்றிய அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் சசிகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் வேலாயுதசாமி செயலாளர் அய்யாத்துரை பொருளாளர் பெருமாள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.